;
Athirady Tamil News

கொல்கத்தாவில் கலவரம்: 5 பஸ்கள் எரிப்பு..!!

0

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரானகொல்கத்தாவில், இ.எம். புறவழிச்சாலையில் நேற்று காலை 11.30 மணிக்கு, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் அதிவேகமாக ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது, அந்த வழியே சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் மீது அந்த பஸ் மோதியது. இதில் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்கள். இதில் ஆத்திரம் அடைந்த உள்ளூர் மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் அந்த வழியே சென்ற பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டனர். உடனே அதிரடி போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் மீது மக்கள் கற்களையும், செங்கற்களையும் வீசி தாக்கினர். இதில் போலீசார், பெண்கள் என பலரும் காயம் அடைந்தனர்.

கூட்டத்தை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர். மக்கள் தீ வைத்ததில் ஒரு பஸ், மேம்பாலத்தில் மோதி சேதம் ஏற்படுத்தியது. மொத்தம் 5 பஸ்கள் எரிக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் கூறினார். சம்பவ பகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுஜித் போஸ் பார்வையிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, “நடந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் அறிக்கை அளிப்பேன்” என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*