;
Athirady Tamil News

சிங்கங்களை பிரிட்ஜில் வைத்திருந்த வேட்டைக்காரன்: 100-க்கும் மேற்பட்ட விலங்குகளின் தலைகளால் அதிர்ச்சி..!!

0

அர்ஜெண்டினாவில் வேட்டைகாரர் ஒருவரின் வீட்டில் நடத்திய சோதனையில் சிங்கங்கள், யானைகளின் தலைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளின் தலைகள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Jorge Nestor Noya அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவரான இவர் வேட்டையாடுதலை தனது தொழிலாளாக செய்து வருகிறார். 40 ஆண்டுகளாக இந்த தொழில் ஈடுபட்டு வரும் இவர் Caza & Safaris என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வேட்டைக்கு போக விரும்புபவர்கள் இந்த நிறுவனத்திடம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டால் அவர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு விலங்குகளை வேட்டையாட அழைத்துச் செல்லப்படுவார்கள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்த நிறுவனமே செய்துவிடும்.

சமீபத்தில் கூட காட்டெருமை வேட்டையாடுவதற்காக 5 நாட்கள் ட்ரிப் பற்றி விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் திடீரென்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவருடைய முதல் வீட்டில் இரண்டு யானைகளின் தலைகள், மான்களின் உடல்கள் போன்றவை இருந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இரண்டாவது வீட்டில் சோதனை செய்த போது அங்கு யானைகளின் கால்கள், காட்டில் வசிக்கும் ஆடுகளின் தலைகள், பல்வேறு வகையான மான்களின் தலைகள் போன்றவைகளும் இருந்துள்ளன.

மூன்றாவது வீட்டில் சிங்கங்களின் தலைகள், தந்தங்கள், டிக் டிக் வகை மானின் தலைகள் மற்றும் மிகவும் அரிதாக காணப்படும் காட்டில் வாழும் 18 பன்றிகளின் தலைகள் போன்றவைகள் இருந்துள்ளது.

இதை அனைத்தையும் அதிகாரிகள் கணக்கிட்ட போது, சுமார் 100-க்கும் மேற்பட்ட விலங்குகளின் தலைகள் இருந்துள்ளது எனவும் அதில் இரண்டு சிங்கங்களின் உடல்கள் பிரிட்ஜில் வைக்கட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அர்ஜெண்டினாவில் சிங்கங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அது மிகப் பெரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து Jorge Nestor Noya வீடுகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் நம்பமுடியாத அளவிற்கு விலங்குகளின் தலைகள் இருந்துள்ளதால், அவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

சோதனையில் ஈடுபட்ட போது Jorge Nestor Noya வீட்டில் இல்லை எனவும், அவரது மனைவிடம் கேட்ட போது ட்ரிப் சென்றிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் Jorge Nestor Noya மீது ஒராண்டுக்கு முன்னர் நபர் ஒருவர் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பறக்கும் விமானங்கள் போன்றவைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அவர் கையும் களவுமாக சிக்கியுள்ளதால் தண்டனை கடுமையான கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில யானைகளின் தலைகள் மற்றும் விலங்களின் தலைகளை அவர் தன்னுடைய வீட்டில் அலங்கார பொருள் போன்று செய்து வைத்திருந்தாகவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + nine =

*