;
Athirady Tamil News

சுமந்திரன் ஐ. தே.கவின் புரோக்கரா என்பதை நாம் அறியவேண்டும், க. சர்வேஸ்வரன்..!!

0

????????????????????????????????????
சுமந்திரன் ஐ. தே.கவின் புரோக்கரா என்பதை நாம் அறிய வேண்டும் வட மாகான கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன்

வவுனியா சுமந்திரன் ஐ.தே.கவின் புரோக்கரா அல்லது அங்கத்தவரா என்பதனை அறியவேண்டும் என வட மாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தற்போது இடம்பெற்ற தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தவறான முடிவுகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுத்து வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் இலக்கை அடைய முடியாமல் இருக்கும் கட்சியாகவும் கட்டமைப்பு இல்லாத கட்சியாகவும் சட்டப்படியாக பதிவு செய்யப்பட்டாத கட்சியாகவும் உள்ளது.

கடந்த 15 வருடங்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டமைக்கான எந்த ஆவணமும் இல்லை. இவ்வாறான நிலையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலையுள்ளபோது தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் எவ்விதத்தில் கிடைக்கும் என்பதை பார்க்கின்றது.

எனவே தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் சிறந்த கட்டமைப்பு இல்லாமல் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இருந்தது. சமஸ்டி தொடர்பில் எந்த தீர்வு திட்டத்தினையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை. நாம் பல தடவைகள் இதை கூறி எம்மிடம் எவ்வாறான தீர்வு தேவை என்பது தொடர்பில் ஓர் திட்டம் இருக்கவேண்டும் என தெரிவித்தபோதிலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் தான் உட்கட்சி போராட்டம் உருவாகியது. அதன் பின்னர் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பைக்குள் உள்ள கட்சிகள் சில சேர்ந்த கட்சியாக பதிவு செய்வது என முடிவெடுத்தோம். எனினும் டெலோ பின்வாங்கியமையினால் அது கைகூடாமல் போனது.

அதனையடுத்தே மாற்றுத்தலைமை தேவை என்பதனால் நாம் புதிய கூட்டமைப்பை உருவாக்கினோம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தீர்வு திட்டத்தினை உருவாக்காமையினாலேயே தமிழ் மக்கள் பேரவை உருவாக்கம் பெற்றிருந்தது. இந்த தமிழ் மக்கள் பேவையே தீர்வு திட்டத்தினை உருவாக்கினார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது.

தற்போது சுதந்திர தினத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பதில் தமிழ் தேசியக்கூட்;டமைப்புக்குள்ளேயே முடிவெடுக்க முடியாமல் உள்ளனர். அவ்வாறான நிலையில் ஒவ்வொரவரும் ஒவ்வொரு முடிவெடுக்கும் நிலையே அங்கு தற்போது உள்ளது,
வடக்கு கிழக்கு இணைப்பதற்கு முஸ்லீம்கள் தயார் இல்லை.

இந் நிலையில் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வைத்து கூறுகின்றார் முடிந்தால் வடக்கு கிழக்கை இணைத்து காட்டுங்கள் என கூறுகின்றார். சம்பிக்க ரணவக்க, ஞானசாரரேரோ, கம்பன்வில போன்ற இனவெறியர்களின் பேச்சுப்போல் இவரும் கருத்து தெரிவிக்கின்றார்.

அது மட்டுமல்ல கொழும்பில் சுமந்திரன் கூறுகின்றார் வடக்கு கிழக்கு தமிழர்கள் பௌத்தத்தினை முதன்மை மதமாக கொள்கின்றார்கள் என. நாம் 70 வருடமாக போராடியதன் அடிப்படையையே தெரியாத சுமந்திரன் இவ்வாறு கூறித்திரிகின்றார்.

சுமந்திரன் யார் ஐதேகவின் புரோக்கரா, அக்கட்சியின் அங்கத்தவரா என்று தெரிவில்லை. ஆமை பூந்த வீடு உருப்படாது என்பது போலவே சுமந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கள் வந்தவுடன் சுட்டமைப்பு உடைந்துவிட்டது. அவர் தமிழரசுக்கட்சிக்குள் தலைவராக வந்தால் அதுவும் உடைந்துவிடும் என தெரிவித்தார்,

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 − 1 =

*