;
Athirady Tamil News

மக்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்..!!

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றுமே மக்களை மாத்திரமே நம்பியிருப்பவர்கள் ஆனால் மாற்று கட்சியினர் மதுபானத்தையும், பணத்தையும் மாத்திரம் நம்பியிருப்பவர்களென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று சனிகிழமை பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் உறையாற்றிய அவர்,

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி நான் வேட்புமனுவை தாக்கல் செய்த நாள் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடைய வேட்பாளர்கள் எமது மக்களை சந்திப்பதற்கு தொடர்நதும் வந்தவண்ணம் உள்ளார்கள். ஆனால் மாற்று கட்சியின் வேட்பாளர்கள் தைபொங்கலுக்கு பிறகுதான் மக்கள் சந்திபை மேற்கொண்டார்கள் .

கடந்த வருடம் மலையகத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் காணிகளை பிரித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட போது, நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த நடவடிக்கையை உடனே நிறுத்தியதாக தெரிவித்தார்.​

இந்த பிரச்சார கூட்டத்தில் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − twenty =

*