உண்மையான சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல…!!

சுதந்திரத்தின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிமைத்தனத்தினால் ஏற்படுத்தப்படும் அவமானத்தின் ஆதங்கத்தை புரிந்திருத்தல் வேண்டும் என 70 ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஏழு தசாப்தங்களின் காலப்பகுதியில் அடையக்கூடிய சாதகமான அபிவிருத்திகளையும் சாதனைகளையும் நினைவுகூரும் சுதந்திரமான தினமாக இது கருதப்படுகிறது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உண்மையான சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, பொருளாதார மற்றும் கலாச்சார சுதந்திரம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும், நாட்டின் அனைத்து பொறுப்புகளையும் அர்த்தமுள்ள விதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.