;
Athirady Tamil News

வவுனியாவில் இலங்கையின் 70 வது சுதந்திரதின நிகழ்வு…!! (படங்கள்)

0

????????????????????????????????????
இலங்கையின் 70 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை விழையாட்டு மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் கொண்டாடப்பட்டது.

சுதந்திரதின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வணிகத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியுதீன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அனைத்து படையினரையும் நினைவு கூறுமுகமாக இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பாண்ட் குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து நாட்டின் சுதந்திரதின உரையை வணிகத்துறை மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியுதீன் ஆற்றினார்.

நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோண், மதகுருமார்கள், முப்படையினர், பொலிசார், சிவில்பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 13 =

*