;
Athirady Tamil News

அலிஸாஹிர் மௌலானா மீது பெண் வழக்கு தாக்கல்…!!

0

பெற்ற கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தத் தவறியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்கு எதிராக பெண் நிதிக் குற்றச்சாட்டு தாக்கல் செய்திருக்கிறார்.

மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட அஞ்சலா கிறிஸ்டின் மயில்வாகனம் என்பவரே தனது சட்டத்தரணியூடாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னிடம் 150,000 (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொண்டதாகவும் அக்கடன் தொகையில் இன்னமும் 75,981 அமெரிக்க டொலர்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை எனவும் அஞ்சலா தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எனவே, தனக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணம், வழக்குச் செலவு மற்றும் பணத்திற்கான 10 சதவீத வட்டி என்பவற்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா திருப்பிச் செலுத்த வேண்டும் என முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடுவலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் ஆரம்ப விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 3 =

*