;
Athirady Tamil News

டுபாய் விமான நிலையத்தில் விசாரணை செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க…!!

0

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க அமெரிக்கா நோக்கி சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் டுபாய் விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்குள்ளானதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இலங்கை விமானப் படையினருக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் பாரிய நிதி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இதற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − two =

*