;
Athirady Tamil News

முல்லைத்தீவில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு…!! (படங்கள்)

0

முல்லைத்தீவு, கொக்களாய் தேவ அன்பின் சபையின் மண்டபத்தில் நேற்று அப்பகுதியிலுள்ளவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் என். பி. இராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு கொள்குளாய் பகுதியில் நீண்டகாலத் தேவையான 40வயதிற்கும் 60வயதிற்குட்பட்டவர்களுக்கு வசிப்பதற்கு மூக்கக்கண்ணாடிகள் வவனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையினரின் பூரண அனுசரணையில் நேற்று காலை 10மணி தொடக்கம் பிற்பகல் 1மணிவரையும் நடைபெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வில்; 120ற்கும் மேற்பட்டவர்களுக்கு வைத்தியரின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டது.

கொக்களாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இதனை வழங்கிவைத்தார். இதில் அப்பகுதியிலுள்ள பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*