;
Athirady Tamil News

பாகிஸ்தான்: தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் பலி..!!

0

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் வாலிபால் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், 11 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 13 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 8 =

*