;
Athirady Tamil News

லிபியா படகு விபத்துக்கு காரணமான 4 ஆள்கடத்தல் தரகர்கள் பாகிஸ்தானில் கைது..!!

0

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்தும் இப்படி கள்ளத்தனமாக கடல்வழியாக பயணித்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடையும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 90 குடியேறிகளுடன் புறப்பட்டு சென்ற ஒரு படகு லிபியா நாட்டில் உள்ள ஜுவாரா நகரையொட்டியுள்ள கடல் பகுதியில் பிப்ரவரி இரண்டாம் தேதியன்று கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படகில் வந்த அனைவரும் பலியாகினர். அவர்களில் 16 பேர் பாகிஸ்தானியர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில். பாகிஸ்தான் நாட்டில் இருந்து கள்ளத்தனமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகளை கடத்தி அனுப்பும் தரகர்கள் 4 பேரை குஜ்ரன்வாலா பகுதியில் அந்நாட்டு தேசிய புலனாய்வு அமைப்படை சேர்ந்த போலீசார் இன்று கைது செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − four =

*