;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஜாமாத்-இ-இஸ்லாமி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்..!!

0

பாகிஸ்தான் நாட்டின் மிக பழமையான அரசியல் மற்றும் இஸ்லாமிய சமுதாயநல கட்சியான ஜாமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் கைபர் பக்துங்க்வா மாகாணத்திற்குட்பட்ட பன்னு முகால்கேல் பகுதி தலைவராக பொறுப்பு வகிப்பவர் மாலிக் துபைல்.

இன்று காலை ஒரு மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாலிக் துபைல் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 9 =

*