;
Athirady Tamil News

நல்ல மனைவி கிடைத்தால் நீண்ட ஆயுள்: 108 வயது மனிதர் கூறும் ரகசியம்..!!

0

கனடாவின் மிக வயதான மனிதராக அறியப்படும் எஸ்மாண்ட் ஆல்காக் சமீபத்தில் தனது 108-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Kerrobert நகரை சேர்ந்தவர் ஆல்காக், இவர் கடந்த 26-ஆம் திகதி சுகாதார மையத்தில் தனது 108-வது பிறந்தநாளை நகர மேயர் வைன் மோக்குடன் கொண்டாடினார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உணவுகள், மாமிசம், பழங்கள் போன்றவை வழங்கப்பட்டன.அப்போது ஆல்காக்-ஐ கெளரவிக்கும் விதமாக ஜனவரி 26-ஆம் திகதியை ஆல்காக் தினமாக மேயர் அறிவித்தார்.

ஆல்காக் கூறுகையில், எனக்கும் ஆரம்பத்தில் பிரச்சனை இருந்தது, பின்னர் நல்ல மனைவி எனக்கு கிடைத்தால் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறேன் என கூறியுள்ளார்.

ஆல்காக்-கின் மனைவி ஹெலன் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார்.சிறிதுகாலம் தனியாக வீட்டில் வசித்த ஆல்காக் பின்னர் சுகாதார மையத்துக்கு நிரந்தரமாக குடியேறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*