;
Athirady Tamil News

அப்பா சீக்கிரம் எழுந்திருங்க! இறந்த அப்பாவின் உடலைக் கட்டியணைத்த பிஞ்சுகள்..!!

0

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Chris, முத்துப்போல் இரண்டு பிள்ளைகள் அவருக்கு, மூத்தவள் பெயர் Pearl, இரண்டாவது மகள் Iris.மனைவி Hele

n Daykin நீண்ட தூரம் பணிக்குச் சென்றுவிட, Chris பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.

ஒரு நாள் திடீரென நெஞ்சு வலி ஏற்பட வீட்டிலேயே உயிரிழந்தார் Chris. அப்பா இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப பிள்ளைகள் முயற்சித்திருக்கிறார்கள்.

மூத்தவள் டாக்டர் மாதிரி அஜீரண மாத்திரை ஒன்றை எடுத்து அப்பா வாயில் போட்டு அவரை “குணப்படுத்த” முயன்றிருக்கிறாள்.

அவர் எழும்பாமலிருக்கவே பிள்ளைகள் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அவர் அருகிலேயே படுத்து விட்டார்கள்.

வேலை முடிந்து வீடு திரும்பிய Helen, அழைப்பு மணி அடித்தும் கதவு திறக்காமல் இருக்கவே பொலிசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பொலிசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போதுதான் அப்பா இறந்தது தெரியாமல் அவரைக்கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருந்த பிள்ளைகளைப் பார்த்திருக்கிறார்கள்.

இது நடந்தது கடந்த ஆண்டு, இப்போதும் அந்தக் குழந்தைகளின் தாய் அந்த சம்பவத்தை நினைவு கூறுகிறார்.

பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை என்று வீட்டுக்கு போன் செய்த பள்ளி ஆசிரியர்கள், தனக்கும் ஒரு கால் செய்திருந்தால் ஒருவேளை தான் சீக்கிரம் வந்து கணவனது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என அனுதினமும் நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறாராம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 11 =

*