;
Athirady Tamil News

பிரித்தானியா குண்டுவெடிப்பில் ஹீரோவாக வலம் வந்த நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை..!! (வீடியோ)

0

பிரித்தானியாவில் நடந்த குண்டு வெடிப்பின் போது உதவிய பிச்சைக்காரன், திருடிய குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த மே மாதம் 22-ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சியின் போது, நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகினர் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வெடிவிபத்தின் போது Chris Parker என்ற 33 வயதுடைய பிச்சைக்காரர் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினார்.

குறித்த சம்பவத்தின் போது அவர் உடனடியாக தாக்குதல் நிகழ்ந்த இடத்தை நோக்கி ஓடி உயிருக்கு போராடிய கால்களை இழந்த சிறுமி ஒருவரை காப்பாற்றி வெளியே தூக்கிச்சென்றார்.

இதைத் தொடர்ந்து அவர் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பலரையும் காப்பாற்றி வெளியே அழைத்து வந்தால் அங்கிருந்த மக்களிடையே பெரிய ஹீரோவாக பார்க்கப்பட்டார்.

இதனால் அவரை பாராட்டி சுமார் 50,000 பவுண்ட் வரை நிதி வசூல் செய்து கொடுத்ததுடன், அவருக்கு வேலையும் கொடுக்கப்பட்டது

இந்நிலையில் அந்த குண்டு வெடிப்பின் போது சிக்கிய Pauline Healey என்ற பெண் தன்னுடைய பர்ஸ் மற்றும் டெபிட் கார்டுகள் போன்றவை காணமல் போய்விட்டதாக பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்த போது Chris Parker அந்த பெண்ணின் பர்ஸ் போன்றவைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி அந்த பெண்ணின் அருகில், அவருடைய பேத்தி மிகவும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அதைக் கண்ட Chris Parker அந்த 14 வயது சிறுமியின் செல் போனையும் திருடிச் சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களிலே அந்த பிச்சைக்காரர் அருகில் இருந்த மெக்டொனால்ட்சில், குறித்த பெண்ணின் டெபிட் கார்டை வைத்து பொருள் வாங்கியுள்ளார். அதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் செல் போனை தொடர்ந்து அழைத்த போது, அந்த போனில் இருந்து மன்னிக்கவும் நான் பேச விரும்பவில்லை என்ற குறுந்த தகவல் மட்டும் வந்துள்ளது.

இதை அனைத்தையும் ஆதரமாகக் கொண்டு பொலிசார் Chris Parker-ஐ உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அப்போது அவர் நீ உண்மையில் ஹீரோ கிடையாது, நடித்து மக்களை ஏமாற்றியுள்ளாய். நீயும் ஒரு திருடன் தான் என்று கூறி நான்கு ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இதைத் தவிர மான்செஸ்டர் பகுதியின் சிட்டி செண்டர் பகுதிக்குள் பத்து ஆண்டுகள் நுழைவதற்கும் தடை விதிப்பதாக குறிப்பிட்ட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*