;
Athirady Tamil News

லண்டன் இரவு விருந்தில் பணக்கார முதலைகளின் அக்கிரமங்கள்: வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!!

0

லண்டனில் The President’s Club Charitable Trust கடந்த 33 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.p>இந்த நிறுவனம், தாங்கள் திரட்டும் நிதியினை “Worthy Children Causes” என்ற பெயரில் குழந்தைகளுக்கு செலவிடுகிறது.

மேலும், நிதி திரட்டல் நிகழ்வை சிறப்பிக்கும் விதமாக இந்த நிறுவனம் சார்ப்பில் ஒவ்வொரு ஆண்டு இரவு விருந்து வைப்பது வழக்கம்.

இந்த விருந்தில், பிரித்தானியாவை சேர்ந்த தொழில் அதிபர்கள், நிதி வழங்குபவர்கள், திரைப்படம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

அதுவும், ஆண்கள் மட்டுமே இந்த இரவு விருந்தில் கலந்துகொள்கிறார்கள். இங்கு கலந்துகொள்ளும் பணக்கார முதலைகளின் அக்கிரமங்களை ஃபினன்ஷியல் டைம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெண் நிருபர் மாடிசன் மேரேஜ் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

விருந்து என்ற பெயரில் பணக்கார முதலைகளின் பாலியல் சீண்டல்கள் தான் அத்துமீறுகின்றன. இங்கு, 130 பணிப்பெண்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த பணிப்பெண்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படுகிறது.

அதாவது, இப்பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருக்க வேண்டும், குறிப்பாக 18 வயது முதல் 23 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஒரு பாரில் நடனம் ஆடுபவர்கள் போன்று இவர்களது ஆடையும், செக்ஸியாக இருக்க வேண்டும். ஸ்ட்ரிப்பர் போல கருப்பு நிற ஷூ, இறுக்கமான ஷார்ட் கார்ஸ்ட் (Corset) உடை அணிந்திருக்க வேண்டும்.

உணவுப் பரிமாற வந்திருந்த பணிப்பெண்களை உணவு பரிமாற அழைத்தும், மதுபானம் எடுத்து வரக் கூறியும், பணிப்பெண்கள் அருகே வந்தவுடன் அவர்களுடன் சில்மிஷம் செய்துள்ளனர்.

சிலர், தங்கள் இருக்கையிலேயே அந்த பணிப்பெண்களை அமர வைத்து, அவர்களுடன் தகாத முறையில் நடந்துள்ளனர்.

மேலும், சிலர் இவர்களது ஆடைகளை சீண்டி, பாலியல் தொல்லைகள் அளிப்பார்கள், இதை விட மோசமான ஒன்று, இப்பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கமெரா பொருத்தப்பட்டு, அப்பெண்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்பதை ஹொட்டல் நிர்வாகம் உளவு பார்க்கும்.

இவ்வாறு, மோசமான சம்பவங்கள் அரங்கேறுகிறது என்று தெரிந்தும் பெண்கள் இங்கு வருவதற்கு முக்கிய காரணம் பணம் மட்டுமே.

இங்கு அதிகமாக பணிப்பெண்களாக வருவது, நாடகங்களில் நடிக்கும் நடிகைகள், மொடல்கள் மற்றும் இளம் மாணவிகள் ஆவர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*