;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய இளைஞருடன் ஓடிப்போன பிரித்தானிய சிறுமி: கதறும் சிறுமியின் குடும்பம்..!!

0

பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி அவுஸ்திரேலிய இளைஞருடன் ஓடி போயிருக்கலாம் என சிறுமியின் குடும்பம் கருதும் நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Norfolk கவுண்டியை சேர்ந்தவர் மேத்யூ ராவ்லிங்ஸ். இவரின் மகள் டில்லி ராவ்லிங்ஸ் (15) கடந்த ஞாயிற்றுகிழமை காலை 8 மணி முதல் மாயமாகியுள்ளார்.

போகும் போது தனது செல்போனையும் டில்லி எடுத்து செல்லவில்லை. இது குறித்து பொலிசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மெக்லரேன் (24) என்ற இளைஞருடன் டில்லி தங்கியிருக்கலாம் என சிறுமியின் குடும்பத்தினரும், நண்பர்களும் கருதுகிறார்கள்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள Hammersmith பகுதியில் சிறுமி டில்லியை மேத்யூ குடும்பத்தினர் சிலர் பார்த்துள்ளனர்.

இது குறித்து மேத்யூ கூறுகையில், மெக்லரேனுடன் டில்லி சென்றிருக்க கூடும், அதற்கேற்றார் போல தனது இன்ஸ்டாகிராம் பெயரை மெக்லரேன் அடிக்கடி மாற்றி வருகிறார்.தன் இருப்பிடத்தை கண்டுப்பிடிக்கக் கூடாது என்றே அவர் மாற்றுகிறார்.

என் மகள் காணாமல் போனதால் குடும்பமே உடைந்து போயுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடமோ அல்லது பொலிசாரிடமோ தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

இதனிடையில் சிறுமியின் அங்க அடையாளங்களை பொலிசார் வெளியிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*