;
Athirady Tamil News

திரிபுராவில் தாமரை ஆட்சி மலரும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை..!!

0

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 உறுப்பினர்களை கொண்ட இந்த சட்டப் பேரவை காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதையடுத்து, திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 18-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டன. அங்கு 51 தொகுதிகளில் தனியாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், தலைநகரில் உள்ள இந்திரா நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்துள்ள மக்களை பார்க்கும்போது, இந்த சட்டசபை தேர்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வெளியேறி விடும் என்றே தோன்றுகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.ஐ.(எம்) அரசு ஊழல்கள் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் மாநிலத்தை சீரழித்துள்ளனர். அதிலிருந்து மக்களை காப்பதற்காக சட்டசபை தேர்தலுக்கு பிறகு திரிபுராவில் தாமரை மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 11 =

*