;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் படை அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் காயம்..!!

0

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தில் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தங்கியிருந்த நிலைகளை நோக்கி அவர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரரும், இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஷானாஸ் பானு (15), என்ற சிறுமியும், யாசின் ஆரிப் (14) என்ற சிறுவனும் படுகாயம் அடைந்தார். அவர்களை மீட்ட ராணுவத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்தனர்.

பாகிஸ்தான் படையினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் மீதும் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கும் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*