;
Athirady Tamil News

மட்டக்களப்பில் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்…!! (படங்கள்)

0

இலங்கையின் 70 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன .

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்டத்தின் சகல அரச திணைக்களங்களிலும் மற்றும் அரச அலுவலங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 70ஆவது சுதந்திரத்தின நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மட்டகளப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து அதிதிகளை பொலிசார், இராணுவம் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் , கலாசார நிகழ்வுகளுடன் மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து வெபர் மைதானத்தில் நடைபெற்ற 70 ஆவது சுதந்திரத்தின நிகழ்வில் அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர .மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த , மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .எம் .ஜி .டி. தீஹா வதுற மற்றும் மதத்தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள் ,பாதுகாப்பு படை தலைமை அதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,அரச அலுவலக அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*