;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி..!!

0

உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் உஸ்தான்பூர் என்கிற இடத்தில் சாலையில் நேற்று முன்தினம் இரவு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 6 பேர் பயணம் செய்தனர்.

அந்த சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − twelve =

*