;
Athirady Tamil News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக நாளை மைசூரு வருகை..!!

0

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சரவணபெலகோலா மகாகும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக நாளை மைசூருக்கு வருகை தருகிறார்.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றபின் ராம்நாத் கோவிந்த் நாளை முதல்முறையாக கர்நாடகா மாநிலத்தின் மைசூருக்கு வருகை தருகிறார். புதுடெல்லியில் இருந்து நாளை மாலை தனி விமானம் மூலம் மைசூரு விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதியை, அந்நகரின் புதிய மேயராக பொறுப்பேற்றுள்ள பாக்கியவதி வரவேற்கிறார். அன்றிரவு நசர்பாத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் (7-ம் தேதி) காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சரவணபெலகோலாவுக்கு சென்று அங்கு நடைபெறும் 88-வது மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மைசூரு விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மைசூரு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*