;
Athirady Tamil News

சில வாரங்களில் உயிரிழக்க போகும் இளைஞருக்கு திருமணம்: நெகிழ்ச்சி வீடியோ..!!

0

அமெரிக்காவில் புற்றுநோய் காரணமாக சில வாரங்களில் உயிரிழக்க போகும் இளைஞர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தின் டாம்பா நகரை சேர்ந்தவர் டஸ்டின் சிண்டர் (19), இவர் synovial sarcoma என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நோய் முற்றியுள்ளதால் இன்னும் சில வாரங்கள் தான் டஸ்டின் உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து தனது கடைசி ஆசையாக பள்ளிக்கூட தோழி சிரா சிவிரியோ (21)-வை திருமணம் செய்ய டஸ்டின் நினைத்தார்.

நடுநிலை பள்ளியில் டஸ்டினும், சிவிரியோவும் ஒன்றாக படித்து நிலையில் பிரிந்துள்ளார்கள்.

பின்னர் மேல்நிலை பள்ளியில் மீண்டும் இணைந்து படித்துள்ளார்கள். இதையடுத்து தனது காதலையும், திருமண ஆசையையும் சிவிரியோவிடம் டஸ்டின் வெளிப்படுத்திய நிலையில் அதற்கு சிவிரியோ ஒப்பு கொண்டார்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவரின் திருமணம் நடந்தது,திருமண செலவுகளை நண்பர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 12 =

*