;
Athirady Tamil News

வாகன பரிசோதனைக்கு நிஜ மனிதர்கள்: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்..!!

0

ஜேர்மன் கார் தயாரிப்பாளர்கள் சிலர் நடத்திய வாகன புகை பரிசோதனையில் மனிதர்களும் குரங்குகளும் பயன்படுத்தப்பட்டதற்கு ஜேர்மனி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசோதனைகளில் டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை மனிதர்களும் குரங்குகளும் சுவாசிக்கும்படி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பரிசோதனையை Volkswagen, Daimler மற்றும் BMW ஆகிய கார் தயாரிப்பாளர்கள் நிதி உதவி செய்யும் அமைப்பான EUGT நடத்தியதாக ஜேர்மன் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

நடந்தது என்ன ?

2012ஆம் ஆண்டு உலக சுகாதார மையம் டீசல் புகையை புற்று நோய் உருவாக்கும் ஒரு காரணியாக அறிவித்ததன் எதிரொலியாக இந்த ஆராய்ச்சியை EUGT நடத்தியதாக New York Times பத்திரிகை வியாழனன்று தெரிவித்தது.

2014 ஆம் ஆண்டு காற்றுப் புகாத ஒரு அறையில் 10 குரங்குகளை அடைத்து வைத்து பல கார்களிலிருந்து வெளியேறிய புகையை செலுத்தியதாக அது தெரிவித்தது.

இந்த சம்பவம் நடைபெற்றது New Mexicoவின் Albuquerqueவிலுள்ள ஒரு பரிசோதனைச் சாலையில் அதே வாரக்கடைசியில், இன்னொரு EUGTஆராய்ச்சியில் 19 ஆண்களும் 6 பெண்களும் டீசல் புகையை சுவாசிக்கும்படி செய்யப்பட்டதாக Stuttgarter Zeitung பத்திரிகையும் SWR வானொலியும் தெரிவித்தன.

மேற்கு ஜேர்மனியிலுள்ள Aachen ஆய்வகத்தில் நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் ஒரு மாதத்தில் பல்வேறு அளவில் நச்சுத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு கொண்ட டீசல் புகையை அவர்கள் சுவாசிக்கும்படி செய்யப்பட்டதாக 2016 ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்தது.

அந்த நேரத்தில், கார் தயாரிப்பாளர்கள் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் டீசல் எஞ்சின்களிலிருந்து வெளியாகும் புகையில் மாசுப்பொருட்களின் அளவு பாதுகாப்பான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததும், பின்னர் Volkswagen, புகையில் நச்சுப்பொருட்களின் அளவைக் குறைத்துக் காட்டும் கருவிகளைப் பயன்படுத்தி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

கார் தயாரிப்பாளர்கள் என்ன கூறுகிறார்கள்? Mercedes-Benz தயாரிப்பாளர்களான Daimler மற்றும் Volkswagen ஆகிய நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சிகளுக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளன.

இத்தகைய ஆராய்ச்சிகள் நியாயத்திற்குப் புறம்பானவை என்று ஜேர்மன் அரசாங்கமும் அவ்வாறில்லை என ஆராய்ச்சியாளர்களும் ஆளுக்கொரு பக்கம் கூறிக்கொண்டிருக்க, Munich, Stuttgart, Hamburg, Düsseldorf மற்றும் Cologne உட்பட பல நகரங்களில் காற்றில் டீசல் வாகனங்களிலிருந்து வெளியாகும் மாசுப்பொருட்களின் அளவு மிக அதிக அளவில் இருப்பதாக Ferdinand Dudenhöffer என்னும் car specialist தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*