;
Athirady Tamil News

ஒரு குடும்பத்தையே கொன்று சடலங்களை எரித்த கொடூரனின் வாக்குமூலம்..!!

0

அமெரிக்காவில் வீடு புகுந்து ஒரு குடும்பத்தை கொலை செய்து அவர்களின் சடலங்களை எரித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மிசூரி மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டுக்குள் திடீரென புகுந்த ட்ரீ அட்சிசன் (24) என்ற இளைஞர் வீட்டிலிருந்த ஹார்லி மைக்கேல் மில்லியன் மற்றும் அவரது மனைவி சமாரா போன்டெயின் கிட்ஸ் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின் அந்த வீட்டில் இருந்த 17 மாத குழந்தையை ஒரு அறையில் வாயை கட்டி அடைத்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

மறுநாள் வந்து கொலை செய்யப்பட்ட இரண்டு பேரையும் காரில் எடுத்து போட்டுவிட்டு, குழந்தையும் உடன் காரில் ஏற்றி கொண்டு அருகில் இருக்கும் காட்டு பகுதிக்கு சென்று காரை நிறுத்தியுள்ளார்.

பின்னர் அங்கு சிறுமியையும் கொலை செய்துவிட்டு மூன்று பேரையும் ட்ரீ தீயிட்டு எரித்துள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ட்ரூ அட்சிசன் சகோதரர் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து ட்ரூவை பொலிசார் கைது செய்தனர்.

ட்ரூவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த கொலையை செய்ய ஒரு வாரம் திட்டமிட்டதாகவும், ஆனால் கொலையை செய்ய எந்த காரணமும் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*