;
Athirady Tamil News

அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐ. தே. க.யில் இணைவு…!!

0

அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓருவர் 04.02.2018 அன்று ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்து கொண்டனர்.

வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் நகரசபை வட்டாரம் ஆறில் போட்டியிடும் திவர்சனா செல்வகுமார் அவர்களே இணைந்து கொண்டுள்ளார்.

அகில இலங்கை தமிழர் மகாசபையிடம் சரியான ஒழுங்குபடுத்தலிலான திட்டங்கள் எதுவும் இல்லாததனால் அக்கட்சியில் இருந்து தாம் விலகியதhக தெரிவித்ததுடன், நான் போட்டியிடும் நகரசபை வட்டாரம் ஆறில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் தம்பாபிள்ளை பிறமேந்திர ராஜா அவர்களிற்கு ஆதரவாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் இணை ஓருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திர ராஜா, மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*