;
Athirady Tamil News

மென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் முடக்கப்பட்டது…!!

0

மத்திய வங்கி பிணைமுறி ஒப்பந்த வழக்கில் சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸின் டபுல்யூ. எம். மென்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஒரு வாரமாக இடைநிருத்தப்பட்டுள்ளன.

உரிய காலத்தில் வரிப்பணத்ததை செலுத்தாததன் காரணமாக குறித்த உற்பத்தியை தடுத்துள்ளதாக ஶ்ரீ லங்கா மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்திற்கு சொந்தமான வெலிசாரையில் உள்ள மது தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளன.

தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் வேலைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விநியோக நடவடிக்கைகள் மற்றும் அலுவலக செயல்பாடுகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 5 =

*