மகளை காண வந்த தந்தை சடலமாக வீடு திரும்பிய சோகம்…!!

தம்புள்ளை கல்வெடியாவ பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்றைய தினம் பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
52 வயதுடைய எம். விஜயரத்ன பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது மகளுடைய வீட்டிற்கு வருகை தந்த குறித்த நபர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்புவதாக தெரிவித்து சென்றுள்ளார்.
எனினும் சென்றவர் அவருடைய வீட்டிற்கும் செல்லாத நிலையில், தகவல்கள் எதுவும் இன்றி தேடப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில், குறித்த பகுதியில் விவசாய நீர்பாசன தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளதுடன், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.