;
Athirady Tamil News

அரசாங்க மதுக்கடைகளை திறக்க வேண்டும்: மைசூரு பெண்கள் நூதனப் போராட்டம்..!!

0

தமிழ்நாட்டில் டாஸ்மாக் எனப்படும் அரசுக்கு சொந்தமான வர்த்தக நிறுவனம் உள்ளதுபோல் கர்நாடக மாநிலத்தில் மைசூரு சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிட்டெட் என்னும் நிறுவனம் மதுவகைகளை வினியோகித்தும், கடைகளின் மூலம் விற்பனை செய்தும் வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள மைசூரு மாவட்டத்தில் உள்ள காக்வாட் கிராமத்தை சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் அரசாங்க மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மது சில்லரை அங்காடி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சில தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் அரசு கடைகளை திறக்க விடாமல் தடுத்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கடைகளில் ஒரு புட்டி மதுவின்மீது விற்பனை விலைக்கு மேல் அதிகமாக சுமார் 50 ரூபாய் உபரி லாபமாக வசூலிப்பதால் தங்கள் பகுதியில் மைசூரு சேல்ஸ் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிர்வாகத்தில் நடைபெறும் சில்லரை விற்பனை கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − two =

*