;
Athirady Tamil News

ரஜினியை விடுங்க.. “கமல்ஹாசனின் சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா..?

0


உலக நாயகன் கமல்ஹாசன் வருகிற பிப்ரவர் 21ம் தேதி ராமேஷ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தினைத் துவங இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் ரஜினியை போல இவரும் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகத் தனது ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ள கமல்ஹாசன், நமது இலக்கு கஜானாவை நோக்கில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இப்படிப்பட்ட கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

கமல்ஹாசனின் ஆரம்பக் காலம்

ஸ்ரீனிவாசன் மற்றும் ராஜலக்‌ஷ்மி தம்பதிகளுக்கு 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மகனாகப் பிறந்த கமல் ஹாஷன் 1960-ம் ஆண்டுக் களத்தூர் கண்ணமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டார்.

பின்னர்த் தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், சினிமா பற்றிய எந்தச் சந்தேகங்களையும் இவரிடம் கேட்கலாம் என்றும் வளர்ந்து பத்ம பூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற இவர் இன்று வரை திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அரசியலில் இறங்குகிறார். இப்படிப் பன்முகம் கொண்ட இவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சொத்து மதிப்பு

கோலிவுட் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் என்று இன்று வரை திரைப்படங்களில் நடித்து வரும் கமல் ஹாசனின் நிகரச் சொத்து மதிப்பு 18 மில்லியன் டாலர் அதாவது 140 கோடி ரூபாய் என்று ஃபின் ஆப் தெரிவித்துள்ளது.

இந்தச் சொத்து மதிப்பானது கமல்ஹாசன் அவர்கள் திரைப்படம் மூலம் பெற்ற சம்பளம், தனிப்பட்ட முதலீடுகள் வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது என பின் ஆப் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

2015-ம் ஆண்டுப் போத்திஸ் சில்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

தென் இந்தியா மட்டும் இல்லாமல் வட இந்தியாவிலும் பெயர் பெற்ற நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவார்.

விளம்பரங்களில் தான் நடிப்பதன் மூலம் பெறும் சம்பளத்தினை எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியாக அளிப்பே என்றும் அறிவித்து இருந்தார்.

திரைப்பட வருவாய்

கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உலக நாயகன் கமல்ஹாசன் 40 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று தரவுகள் கூறுகின்றன.

தனிப்பட்ட முதலீடுகள்

சேமிப்பு என்பது அனைவருக்கும் என்பது முக்கியம் என்பதால் இவர் 30 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

ஆடம்பர கார்

இவரிடம் இன்னோவா கார் இருந்தாலும் ஆடி, ஹம்மர் மற்றும் லிமோயூசினி என 3 ஆடம்பர கார்களைப் பயன்படுத்தி வருகிறார்.

வருமான வரி

நடிகர்களில் முறையாக வருமான வரி செலுத்தி வரும் கமல்ஹாசன் சராசரியாக ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் வரை வருமான வரி செலுத்தி வருகிறார்.

வீடு

2004-ம் ஆண்டுச் சென்னை ஆழ்வார்பேட்டையில் இவர் வாங்கிய வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 5 ஆண்டுகள் இவர் பெற்ற சம்பளம்

ஆண்டு வருமானம்

2016 Rs.45 கோடி
2015 Rs.38 கோடி
2014 Rs.26 கோடி
2013 Rs.31 கோடி
2012 Rs.45 கோடி


விருதுகள்

1990-ம்ஆண்டுப் பத்மஸ்ரீ, 2014-ம் ஆண்டுப் பத்ம பூஷன், 2016-ம் ஆண்டுச் செவாலியர் பிர்ஞ்ச் விருது போன்ற முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிக் பாஸ்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இவர் 2017-ம் ஆண்டுத் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் 15 முதல் 18 கோடி ரூபாய் வரை சம்பளமாகப் பெற்று இருப்பார் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.

கமல் நற்பணி இயக்கம்

தனது திரைப்பட ரசிகர் மன்றம் கமல் நற்பணி இயக்கம் மூலமாக இரத்த தானம், உடல் உறுப்புத் தானம் எனப் பல சமுக நலப்பணிகளைச் செய்து வந்துள்ளார்.

தற்போது இதனை அப்படியே அரசியல் கட்சியாக மாற்றும் முடிவில் இருக்கிறார்.

மகள்கள்

கமல் ஹாசனுக்கு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் திரைப்படத்தில் நடிப்பது, இசை அமைப்பது என லட்சங்களில் சம்பளம் பெறுகின்றனர்.

திருமண வாழ்க்கை

1978-ம் ஆண்டு வானி கணபதி என்பவரைத் திருமணம் செய்து 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

பின்னர்ச் சரிகாவை 1988-ம் ஆண்டுத் திருமணம் செய்து 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

பின்னர்க் கவுதமியுடன் 2004 முதல் 2016 வரை வாழ்ந்து வந்தார்.

இவரைப் போன்றே தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவருக்கு மூன்று திருமண நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*