;
Athirady Tamil News

மீண்டும் விவசாயம் செய்ய நாங்கள் தயார்: அங்கஜன்..!!

0

மீண்டும் விவசாயம் செய்ய எங்கள் இளைஞர்கள் தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்.மாநகரசவை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் உரையாற்றுகையில், “எங்களுடைய தமிழ் தலைமைகள் எங்களுக்கு உண்மையாக இல்லை. நீங்கள் எங்களுக்கு மீள் குடியேற்றத்ததை முடித்து தந்து, காணாமல் ஆக்க ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு முடிவினை சொல்லி, அரசியல் கைதிகளை விடுதலை செய்து, எங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்து தர வேண்டும் என கோருகின்றேன்.

வடமாகாணம் ஒரு விவசாய பூமி. சிறிமாவோ காலத்தில் விவசாய புரட்சி இந்த மண்ணில் ஏற்பட்டது. மீண்டும் விவசாயாத்திற்கு செல்ல எங்கள் இளைஞர்கள் தயாராக இருக்கின்றர்கள். அதற்கு உங்கள் உதவிகளை கோரி நிற்கின்றோம்.
மக்கள் சமவுரிமைக்காக தமிழ் தலைமைகளுக்கு வாக்களித்தார்கள், ஆனால் இன்று சமவுரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை. எங்களை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாங்கள் தற்போது எண்ணெய் சட்டியில் இருக்கின்றோம். அதில் இருந்து தவறி நெருப்பில் விழ தயாராக இல்லை. நாங்கள் உங்களுடன் பயணிக்க தயாராக உள்ளோம்” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 1 =

*