;
Athirady Tamil News

தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கு விஷேட பயிற்சி முகாம்..!!

0

கிழக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) குறித்த பயிற்சி முகாம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இடம்பெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே அமைப்பின் தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ், முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளர் பண்டார மாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி முகாமில் கிழக்குமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இணைப்பாளர்களும் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர்களும் கிழக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நீதியான நேர்மையான தேர்தல் மூலம் உள்ளூட்சிமன்ற பிரதிநிதிகளை தேர்வுசெய்வதற்கு மக்களுக்கு உதவும் வகையில் இந்த கண்காணிப்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 16 =

*