;
Athirady Tamil News

ஒடிசா: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.டி.ஓ லாரி மோதி பலி..!!!

0

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தின் பனிகொய்லி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.டி.ஓ மற்றும் அதிகாரிகள் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சட்ட விரோதமாக மற்றும் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பிடிப்பதற்காக இச்சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஜாஜ்பூர் நகரின் ஆர்.டி.ஓ மனோஜ் குமார் பெஹ்ரா இரவு 11:30 மணியளவில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 15 =

*