;
Athirady Tamil News

பென்னாகரம் அருகே சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ய முயன்ற கூலி தொழிலாளி கொலை..!!

0

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடியூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிவா. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் தங்கி இருந்து பழைய இரும்பு பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களது 9 வயது மகள் கோடியூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழி பீமன் (40), குடிபோதையில் வந்து சிறுமியிடம் தகாத முறையில் சில்மி‌ஷம் செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி இதுகுறித்து பாட்டி சின்னபொண்ணுவிடம் கூறினார்.

அவர் பீமனை சத்தம் போட்டார். பின்னர் இதுகுறித்து பெங்களூருவில் உள்ள தனது மகள் சிவா, மருமகன் சக்திவேல் ஆகியோரிடம் கூறினார். இவர்கள் 2 பேரும் நேற்றிரவு பெங்களூருவில் இருந்து கோடியூர் வந்தனர். பின்னர் பீமனை நேரில் சந்தித்து அவரைத் தட்டிக்கேட்டனர். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அவர்களிடம் இருந்து பீமன் தப்பி ஓடினார். அவரைத் துரத்தி சென்றனர். பின்னர் கணவன், மனைவி இருவரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை பீமன் அங்குள்ள விளையாட்டு மைதானம் அருகே பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பென்னாகரம் போலீசார் விரைந்து சென்று பீமன் பிணத்தை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பீமனை அடித்து கொன்றுவிட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சக்திவேல்-சிவா ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + twenty =

*