;
Athirady Tamil News

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிப். 10-ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்..!!

0

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி மூன்று நாள் பயணமாக பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.

பிப்ரவரி 10-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலஸ்தீனம் செல்கிறார். இதுவே அந்நாட்டு ஒரு இந்திய பிரதமரின் முதல் பயணமாகும். அங்கு பாலஸ்தீனம் பிரதமர் ரமி ஹம்தல்லாவை சந்தித்து பேசுகிறார். அன்று மாலையே அங்கிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்கிறார்.

துபாயில் 11-ம் தேதி நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை சந்தித்து பேசுகிறார்.

12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × four =

*