;
Athirady Tamil News

விமானப் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும்: தவறினால் கடுமையான தண்டனை..!!

0

உலகிலேயே இந்தோனிசியாவில் தான் இறுக்கமாக இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நாட்டிற்கு செல்லும் விமான பணிப்பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அங்கு செல்லும் முஸ்லீம் விமான பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் படி விமானம் அந்த பகுதியின் எல்லைக்குள் நுழைந்தவுடன் முஸ்லீம் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும்.

குறிப்பாக விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களாக வந்த புகாரை அடுத்து இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும். இரண்டாவது முறையும் பின்பற்றவில்லை என்றால் இஸ்லாமிய சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 17 =

*