;
Athirady Tamil News

இந்த கிராமத்தின் மக்கள்தொகை ஒன்று தான்: நம்பமுடியவில்லையா?..!!

0

ஒரு ஊரில் ஒரே ஒரு பெண்மணி மட்டும் வசிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?ஆம் அமெரிக்காவின் Nebraskaவிலுள்ள Monowiஎன்னும் கிராமத்தில் Elsie Eiler என்னும் 83 வயது பெண்மணி மட்டுமே வசிக்கிறார்.

அவர்தான் அந்தக் கிராமத்தின் மேயர், bartender, librarian மற்றும் ஒரே குடிமகள்.

Elsie Eiler-ன் கணவர் 2004ஆம் ஆண்டு இறந்தபின் Monowiயின் ஒரே குடிமகளாகி விட்டார்.

அதிலிருந்து கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் அவரை பிரபலமாகப் பார்க்கிறார்களாம். தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் அடிக்கடி அவரைப் பேட்டி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனவாம்.

Elsieயின் தாய் Nebraskaவில் பிறந்தவர், தந்தை ஜேர்மனியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர். 19 வயதில் தன் நண்பனை மணந்துகொண்ட அவர் 1975 முதல் Monowiயிலேயே வாழ்ந்து வருகிறார்.

1980ம் ஆண்டு வரை 18 பேர் மட்டும் வசித்த இந்த ஊரிலிருந்து அவரது மகனும், மகளும் உட்பட இளைஞர்கள் எல்லோரும் வேலை தேடி வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள்.

அவருக்கு நான்கு பேரப்பிள்ளைகளும், அவர்களது பிள்ளைகளும் இருந்தாலும் அவர்கள் வேறிடத்தில் வசிக்கிறார்கள். தனக்கு பல பொழுதுபோக்கு அம்சங்களும் பழைய நண்பர்களும் இருப்பதாக அவர் தன்னையே ஆறுதல்படுத்திக் கொள்வாராம்.

ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் பள்ளித்தோழர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து சீட்டு விளையாடி மகிழ்கின்றனர்.

மற்றவர்கள் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் தான் வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறும் Elsie, கடைக்கு போக வேண்டுமென்றாலும் 60 மைல்கள் பயணம் செய்ய வேண்டுமாம்.

எதற்காக தனியாக வாழ வேண்டும் என நினைக்கும் சிலர், ”நீங்கள் இறந்துவிட்டால் என்ன ஆகும்” என்று கேட்கிறார்கள்.

அதைப்பற்றித் எனக்குக் கவலை இல்லை, உயிரோடிருக்கும்போது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப்போகிறேன், இறந்த பின் என்ன ஆகும் என்பதைப்பற்றியெல்லாம் தனக்குக் கவலை இல்லை என மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறார்.

மற்றவர்கள் எண்ணுவதுபோல் தான் தனியாக இருப்பதாக உணர்வதில்லை என்கிறார் அவர். பகல் முழுவதும் நான் மனிதர்களைப் பார்க்கிறேன், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், வருவதும், போவதுமாக ஒரு நாள் பிஸியாகக் கழிகிறது. ஒரு நாளின் முடிவில் எனக்கென்று தனிப்பட்ட நேரம் கிடைப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்கிறார் அவர்.

Elsie Eiler தனது வீட்டின் அருகிலேயே லாட்ஜ் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*