;
Athirady Tamil News

பிச்சைக்காரர் மீது காதல் கொண்ட பெண்! சுவாரசிய சம்பவம்..!!

0

நெதர்லாந்தில் பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு தெருவில் பிச்சைக்காரரை போல் வாழ்ந்து வந்த நபரை இளம்பெண் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார்.

2006ஆம் ஆண்டு அமெரிக்கரான Vic Kocula, Amsterdamஇல் விடுமுறை நாட்களை செலவழித்துக் கொண்டிருக்கும்போது அவரது பணம் முழுதும் செலவழிந்து போனது.

ஒரு பிச்சைக்காரனைப்போல அழுக்கு உடையும் கலைந்த முடியுமாக தெருவோரத்தில் படுத்துக்கிடந்தபோது தேவதை போல் ஒரு பெண் அவர் அருகே வந்து அமர்ந்தார்.

அவர் சுவீடனைச் சேர்ந்த Emmy Abrahamson.

இருவரும் பேசிக்கொள்ள ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே காதல் பற்றிக்கொண்டது.

Vic Koculaஇன் அழகான பிரவுன் நிறக் கண்களில் மயங்கிப்போன Emmyக்கு அவரை விட்டுப் பிரிய மனமே வரவில்லை.

இருப்பினும் தனது மொபைல் எண்ணைக் கொடுத்து விட்டு வியன்னாவுக்கு திரும்பினார்.

Emmyக்குத் தெரிவிக்காமலே அவரை சந்திப்பதற்கான பணத்தை சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார் Vic.இனி Vicஐ சந்திக்க முடியுமா என Emmyயின் மனம் அவரையே சுற்றி சுற்றி வந்தது.

மூன்று வாரங்களானது, Emmyக்கு ஒரு போன் கால் வந்தது, அழைத்தது Vic. “நான் வந்து விட்டேன்” என்றார் அவர்.

ஒரு மாளிகையில் இருவரும் மணமுடித்துக் கொண்டார்கள், Vic ஒரு electrical engineer ஆனார்.

இன்று முதன்முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த தம்பதிக்கு Desta மற்றும் Til என்னும் ஆறு வயது இரட்டைப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Emmy தங்கள் காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − one =

*