;
Athirady Tamil News

அரியாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – வழக்கு இன்று…!!

0

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் கைதாகியுள்ள விசேட அதிரடிப்படையினர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம், வசந்தபுரம் பகுதியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதுதொடர்பில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இன்று (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 23ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*