;
Athirady Tamil News

13 மாத குழந்தை நடு வீதியில், தந்தையை தேடி வலைவீசுகிறது காவல்துறை…!!

0

எம்பிலிபிட்டி கட்டுவன வீரகுட்டிகொட பகுதியில் 13 வயதுடைய பெண் குழந்தையை வீதியில் கிடத்திச்சென்ற தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

22 வயதுடைய யுவதி ஒருவர் இளைஞர் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்தமையினை தொடர்ந்து கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் குறித்த குழந்தையை பிரசவித்துள்ளார்.

குழந்தையுடன் சுமார் ஒரு வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில், தந்தையால் குழந்தைக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளார்.இதனாலேயே தாம் வீதியில் விட்டுச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த யுவதியின் காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்யது நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, யைது செய்யப்பட்டுள்ள யுவதியை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − three =

*