;
Athirady Tamil News

எரியும் வீட்டில் பறித்தவரை லாபம்: மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனா..!!

0

மாலத்தீவு இந்தியாவிற்கு நேர் தெற்காக இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கிய அரணாக இருக்கிறது.

இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு இருப்பதால் இந்தியா மாலத்தீவை தனது குழந்தை போலவே பாவித்து வருகிறது.

இந்தியாவின் பரம எதிரியான சீனா, இந்தியாவின் நட்பு நாடுகள் அனைத்தையும் தன்பக்கம் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன்படி, இலங்கை, பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.

இதேபோல, மாலத்தீவிலும் தலையிட்டு தன்பக்கம் அந்த நாட்டை இழுக்க வேண்டும் என்ற திட்டம் சீனாவுக்கு உள்ளது. இதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. மாலத்தீவு மட்டும் சீனாவின் பக்கம் சாய்ந்துவிட்டால் அங்கு சீனா ராணுவ முகாம்களை அமைத்துவிடும். அப்படி முகாம்கள் அமைந்தால் அது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் சீனா ஆதிக்கத்துக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா மிக கவனமாக செயல்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*