;
Athirady Tamil News

சூடு பிடித்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் களம்…!!

0

தேயிலை தோட்டங்கள் காடாகி வருவதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாக சிலர் தேர்தல் பிரசாரங்களில் கூறி வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை மட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.க்ளைபோசைட் எனும் இரசாயன மருந்தை பாவிக்க கூடாது என ஜனாதிபதி எடுத்த தீர்மானமே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்றீடான மருந்தையோ அல்லது வேறு எந்த மாற்று வழிமுறைகளையோ ஜனாதிபதியே முன்வைக்க வேண்டும்.தமது ஜனாதிபதி என வீரவசனம் பேசுவோர் இது குறித்து ஏன் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க செய்யும் வகையில் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இதனிடையே, இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையே காணப்படும் மாற்றத்தை தேர்தல் காலங்களில மக்கள் அனுபவித்து வருவதாக அதன் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் அதிகரிப்பே அதிகரித்த மதுபான விற்பனைக்கான காரணம் என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மலையகத்தில் உள்ள அனைத்து லைன் குடியிருப்புகளுக்கும் பதிலாக தனி வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + eight =

*