;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த நாள் – பிப்.7- 1971..!!

0

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு முதன் முறையாக வாக்குரிமைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதேதேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கினர். * 1812 – மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. * 1819 – ஸ்டாம்போர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார். * 1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர். * 1904 – மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.

* 1914 – சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது. * 1962 – கியூபாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது. * 1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர். * 1967 – தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர். * 1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. * 1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது. * 1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது. * 1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. * 1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன் நாட்டிலிருந்து வெளியேறினார். * 1990 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது. * 1991 – எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.

* 1991 – ஐரிஷ் குடியரசு ராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது. * 1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1999 – உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது. * 2005 – விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*