;
Athirady Tamil News

விளையாட்டின் மூலம் எலிசபெத் மகாராணி சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா?..!!

0

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் குதிரை பந்தயம் மூலம் இதுவரை 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

குதிரை சவாரி மேற்கொள்வதில் மகாராணிக்கு இந்த 91 வயதிலும் ஆர்வம் குறையவில்லை.அதே சமயம் தனது குதிரைகளை வைத்து அவர் ஏராளமாக பணம் சம்பாதித்துள்ளார்.

குதிரை பந்தயங்களில் தனது குதிரைகளை எலிசபெத் மகாராணி ஆர்வமாக பங்கேற்க வைப்பார்.

1988-லிருந்து 2017 வரை அவருடைய மாட்சிமைக்கு கீழ் உள்ள குதிரைகள் 2815 பந்தயங்களில் கலந்து கொண்டு 451 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளது.இதன் மூலம் 6 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மகாராணிக்கு பரிசு கிடைத்துள்ளது.

அதிக வெற்றிகள் பெற்ற குதிரைகளுக்கு சொந்தகாரராக மகாராணி 11வது இடத்தில் உள்ளார்.

குதிரை பந்தயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பானதாக இருந்தது, ஏனெனில் அந்தாண்டு தான் £557,650 என்ற அளவில் அதிக பணத்தை வென்றுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*