;
Athirady Tamil News

கோமாவில் இருந்த காதலிக்காக எட்டாண்டுகள் காத்திருந்த காதலன்: நடந்த அதிசயம்..!!

0

ஜப்பானில் கோமாவில் இருந்த காதலி சுயநினைவுக்கு வர எட்டாண்டுகள் ஆன நிலையில் பொறுமையாக காத்திருந்த காதலன் அவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

நசிஜீ ஷிசாசி என்ற ஆணும் நகாஹரா மய் என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக நட்பாக இருந்த நிலையில் அது பின்னர் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.ஆனால் துரதிஷ்டவசமாக நகாஹராவுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது.

மருத்துவமனையில் நகஹரா சேர்க்கப்பட்ட நிலையில் அவரின் உடல் நிலைய் மோசமாகி கொண்டே சென்றதோடு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் நகஹரா கோமா நிலைக்கு சென்றார்,அவருக்கு எப்போது நினைவு திரும்பும் என தெரியாத நிலையில் காதலியை கரம் பிடிப்பதற்காக காத்திருக்க நசிஜீ முடிவெடுத்தார்.

தினமும் அலுவலகம் செல்லும் முன்னர் மூன்று மணி நேரம் காதலியிடம் நேரம் செலவிட்ட நசிஜீ அவரின் உடலுக்கு மசாஜ் செய்வதோடு, அவருக்கு பிடித்த பாடல்களையும் போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து நகாஹாரா திடீரென கண்விழித்தார், ஆனால் அவரால் மற்றவர்களை பார்க்க முடிந்ததே தவிர அவர்களிடம் பேச முடியவில்லை.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்த நிலையில் கடந்த 2014-ல் நன்றாக குணமடைந்தார்.

இதையடுத்து எட்டாண்டுகள் தனது காதலிக்காக பொறுமையாக காத்திருந்த நசிஜீ 2014 ஆகஸ்ட் மாதத்தில் நகஹராவை மருத்துவமனையிலேயே வைத்து திருமணம் செய்து கொண்டார்.தற்போது தம்பதிகள் நலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + twelve =

*