;
Athirady Tamil News

முகம் வெந்த நிலையில் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: அதிர்ச்சி காரணம்..!!

0

சீனாவில் பச்சிளம் குழந்தை ஒன்று ஹீட்டரில் முகம் குப்புற விழுந்ததில் அதன் முகம் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிவருகிறது.

சீனாவில் கடும்பனிப்பொழிவு காரணமாக அங்கு இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பின் உள்ளே தங்கள் அறைகளின் வெது வெதுப்பாக இருக்கும் பொருட்டு பெரும்பாலானோர் ஹீட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பாட்டியின் அரவணைப்பில் இருக்கும் 6 மாத குழந்தை ஒன்று ஹீட்டரில் சிக்கி முகம் வெந்து போகும் அளவுக்கு படுகாயம் அடைந்துள்ளது.

சம்பவத்தன்று குழந்தையின் பாட்டி வீட்டுக்கான சாமான்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். அவர் வெளியே சென்ற நேரம் குழந்தை தூங்கியதால், வெது வெதுப்பாக இருக்கட்டும் என கருதி ஹீட்டரை இயங்கவிட்டு சென்றுள்ளார்

அவர் குடியிருப்புக்கு திரும்பிய போது குழந்தை படுத்திருந்த அறையில் புகை மூட்டமாகவும் கருகிய வாசமும் வந்துள்ளது.

பதறியடித்து உள்ளே சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஹீட்டர் தவறி தூங்கியிருந்த பச்சிளம் குழந்தையின் மீது விழுந்துள்ளது.

அதில் குழந்தையின் முகம், கை, கால்கள் என உடல் பாகங்கள் வெந்துள்ளது.

இதனையடுத்து தாயார் மற்றும் பாட்டி ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை இட்டுச் சென்றுள்ளனர்.

குழந்தை தற்போது ஆபத்து கட்டத்தில் இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக ஷாங்காய் கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் பரிதாப நிலை மற்றும் அவர்களது பொருளாதார நிலை கண்டு, அக்கம் பக்கத்தினர் நிதி உதவியும் அளித்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*