;
Athirady Tamil News

கர்ப்பத்தை மறைத்த இளம்பெண்: பிறந்த குழந்தையை பெட்டிக்குள் அடைத்து நாடகம்..!!

0

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தாம் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தாரிடம் மறைத்து, இறந்து பிறந்த குழந்தையின் உடலை ஷூ பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்த சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் பிராட்போர்டு Coroners நீதிமன்றம் கேட்ட 36 கேள்விகளுக்கு தொடர்புடைய இளம்பெண் பதிலளிக்கவும் மறுத்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதுவரை தாம் கர்ப்பமாக இருப்பதை தமது உறவினர்களிடம் இருந்து மறைத்து வந்த,

அப்போது 19 வயதேயான ஆயிஷா தாரிக், தனது இறந்து பிறந்த குழந்தையை பெற்றோருக்கு பயந்து ஷூ பெட்டிக்குள் மறைத்து தனது கட்டிலுக்கு அடியிலேயே 6 நாட்கள் பாதுகாத்து வந்துள்ளார்.

நடந்து 2 நாட்கள் கடந்த நிலையில் கெட்ட வாசம் வருவதாக குற்றம்சாட்டிய ஆயிஷாவின் தாயார், நடந்த சம்பவத்தை அறிந்து உடைந்துபோயுள்ளார்.

ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது ரயில் நிலையத்தில் வைத்து தம்மை இருவர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கற்பழித்ததாக தாயார் தஸ்லீம் அக்தரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மார்ச் 5-ஆம் திகதி மருத்துவமனைக்கு சென்ற இருவரும் நடந்தவற்றை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி பொலிசாரிடமும் தாம் கற்பழிக்கப்பட்டது தொடர்பில் ஆயிஷா புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கற்பழிப்பு சம்பவம் பொய் என தெரிய வந்ததும், ஆயிஷா தமக்கும் நபர் ஒருவருக்கும் தொடர் பாலியல் உறவு இருந்து வந்துள்ளதை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து ஆயிஷாவை கைது செய்த பொலிசார் அவரது தாயார் தஸ்லீமாவை கைது செய்தனர்.

ஆயிஷாவுக்கு குழந்தை இறந்து பிறந்தனவா இல்லையா என்பது தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளை கேட்டுள்ள நீதிமன்றம், மேலதிக சாட்சியங்களை திரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eleven =

*