;
Athirady Tamil News

17 வயது மாணவனுடன் ஆசிரியைக்கு தகாத உறவு: சிக்கியது எப்படி?..!!

0

அமெரிக்காவில் 17 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்து கொண்ட ஆசிரியைக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தெரியவந்துள்ளது.

ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டிபானி கிலிஜா (36). அங்குள்ள போர் லூசி மேல் நிலை பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு 17 வயது மாணவனுடன் டிபானிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் பொலிசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் கடந்த மே மாதம் டிபானியை கைது செய்தார்கள். அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

விசாரணையின் மூலம் டிபானி குற்றவாளி என உறுதியாகியுள்ளது. வரும் மார்ச் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் டிபானிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − five =

*