;
Athirady Tamil News

வயிற்று பிழைப்புக்காக நிர்வாண மொடலிங் செய்யும் முதியவர்..!!

0

சீனாவில் முதியவர் ஒருவர் பிழைப்புக்காக நிர்வாண மொடலிங் செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் செங்டு நகரில் குடியிருந்துவரும் 88 வயதான Wang Suzhong என்பவரே தமது ஓய்வூதியத்தால் பிழைப்பு நடத்த முடியாது என்பதால் நிர்வாண மொடலிங் செய்து வருபவர்.

மாதம் 700 RMB (£78.73) தொகை மட்டுமே தமக்கு ஓய்வூதியமாக கிடைப்பதாக கூறும் அவர், கலை கல்லூரி ஒன்றில் நிர்வாண மொடலிங் செய்தால் நாள் ஒன்றுக்கு 70 முதல் 100RMB (£11.25) வரை ஊதியம் கிடைக்கும் என்றார்.

கல்லூரி மாணவர்களின் தேவைக்கு ஏற்ப மொடலிங் செய்துவரும் வாங், தினம் 8 மணி நேரம் செலவிடுகிறார்.

கல்லூரியின் முக்கிய பகுதிகளில் Wang-ன் நிர்வாண படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த படங்களை தாம் ரசிப்பதாகவும், அருவருப்பாக பார்ப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த 6 வருடங்களாக Wang இந்த நிர்வாண மொடலிங் துறையில் இருந்து வருகிறார்.

இதனால் இவரது பிள்ளைகள் இவரை ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மகன் ஒருவர், Wang இந்த தொழைலை கைவிடாவிட்டால் அவரது இறுதிச்சடங்குகளில் கூட பங்கேற்க மாட்டேன் என கடுமையாக பேசியுள்ளார்.

ஆனால் தனது பிள்ளைகள் எவரும் தம்மை கவனிக்கவில்லை என்பதாலையே தாம் இந்த மொடலிங் துறையில் கவனம் செலுத்தியதாகவும்,

இது தமக்கு புதிய ஊக்கத்தையும், நேரான பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற பாடத்தையும் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + eleven =

*