;
Athirady Tamil News

ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலை…!!

0

கிளிநொச்சி ஜயந்திநகர் இந்து வித்தியாலய ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு யாழ் சிறுவர் இல்லத்தில் ,தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 6 பேரும் இன்று மீண்டும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 17 ஆம் திகதி குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அறுவரையும் யாழ் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதவான் ஏ ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

இதன்போது தலை மற்றும் கைப்பகுதிகளில் காயமுற்ற ஆசியரியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அறுவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 5 =

*